Saturday, 14 January 2017

பன்னீர் செல்வம் VS தை பொங்கல்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, ஆளுநர், ஸ்டாலின் வாழ்த்து


தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார். பிரதமர் மோடி,ஆளுநர் வித்யாசாகர், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பன்னீர் செல்வத்திற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.


சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 1951ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்தார். இவருக்கு மனைவி , ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பெரியகுளத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை இன்று ஓ.பன்னீர்செல்வம் கொண்டாடினார்

பொங்கல் பண்டிகையுடன் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி இன்று தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பொங்கல் மற்றும் பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு மகர சங்கராந்தி வாழ்த்துக்களை ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
இதேபோல பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர், பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இன்று வாழ்த்து கூறினார். பூங்கொத்து கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் இதற்கு நன்றி தெரிவித்ததோடு அவருக்கு மகரசங்கராந்தி வாழ்த்து கூறினார்.
இதேபோல எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment