சிகரத்தை மிதி
சிகரத்தை மிதி நீயே உனக்கு நண்பன்
முயற்சி, பயிற்சி, புகழ்ச்சி, மகிழ்ச்சி
சாமினா அர்ச்சனை
ஆசாமினா பிரச்சனை.
ஆசாமினா பிரச்சனை.
பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை.
தொடர்ந்து பல சோதனைகள் வந்தாலும் அதனால் வேதனை அடையாது. அந்த சோதனைகளையே பல ரோதனைகள் செய்து சாதனை படைக்கும் மனிதர்களே சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள்.
சரித்திரம் படிப்பது யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் புதிய சரித்திரம் படைப்பது அனைவராலும் முடியாது. ஒரு சிலராலேயே முடியும்.
என் பிறப்பு வெறும் ஒரு சம்பவம். ஆனால் நாளை என் இறப்பு ஒரு சரித்திரம் ஆக வேண்டும்.
இந்த பூமியில் வாழ்வது மட்டும் போராட்டம் அல்ல. மிகப்பெரிய ஒரு போராட்டத்துக்கு பின் தான் நாம் இந்த பூமியில் பிறக்கவே செய்கிறோம்.
நீ முந்தி, நான் முந்தினு 40 கோடி உயிர் அணுக்களை வென்று தான் ஒவ்வொரு உயிரும் இந்த மண்ணை தொடுகிறது.
அந்த 40 கோடியில் முதல் ஆளாக இந்த மண்ணை தொட்டவன் நான்.
நான் மூத்த பிள்ளை.
இன்றைய போட்டி, பொறாமைகள் நிறைந்த இந்த உலகில் தலை கணம் சிறிது தேவை. அந்த தலை கணம் தான் உங்களுக்கு ஊந்து சக்தி. என்பதை மறந்து விடாதீர்கள்.
நாம் ஒரு கிலோ மீட்டர் தூரம் போவதாக இருந்தால் கூட. சில சமயங்களில் இடது, வலது என்று எவ்ளவு? பாதைகளை, சாலைகளை கடக்க வேண்டி இருக்கு.
பல நூறு கிலோ மீட்டர் தூரம் என்றால்?
நான் ஒரே ஒரு ரோட்டில் தான் சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் வரை காரில் செல்வேன். லெப்ட், ரைட் என்று எந்த பக்கமும் திரும்ப மாட்டேன் என்று சொல்வது எவ்ளவு? பெரிய முட்டாள் தனம்.
அதே போல் தான் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்வது.
நாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அந்த வேலையை முடித்து விட்டு அடுத்த வேலையை செய்வதில் தவறே இல்லை. ஆனால் நாம் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் வேலையை மட்டுமே வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. அதே சமயத்தில் நீங்கள் இப்பொழுது ஒரு வேலையை பாதி செய்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வேலையை பாதியிலேயே விட்டு, விட்டு வேறு ஒரு வேலைக்கு தாவுதல். அது மிக முட்டாள் தனம்.
மிக சிறு வயதில் நான் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது. பட்டிமன்ற பேச்சாளர்கள் இவ்வாறு பேசுவதையே முழு நேர தொழிலாக கொண்டர்வர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று நினைத்தேன். அது தவறு என்பது எனக்கு பின்னர் தான் புரிந்தது. ஒரு சிலர் அவ்வாறு இருந்தாலும். பலர் ஒரு பெரிய கௌரவமான வேலையில் இருந்து கொண்டு அந்த வேலையையும் விடாது, தொடர்ந்து பட்டிமன்றங்களில் பேசுகிறார்கள். அது போன்றவர்கள் நட்சத்திர பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள்.
பாரதி பாஸ்கர் அவர்கள் அதற்கு சிறந்த உதாரணம். சிட்டி பேங்கின் Vice President ஒரு பட்டிமன்ற பேச்சாளர்.
நாம் பல்வேறு துறைகளில் சாதிக்க முயற்சிக்கும் பொழுது. நாம் சாதிக்கிறோமோ இல்லையோ. ஆனால் அவ்வாறு நாம் ஒவ்வொரு துறையிலும் சாதிக்க முயற்சி செய்யும் பொழுது. அந்த முயற்சிகளின் மூலம் நாம் அந்த, அந்த துறைகளை பற்றி ஓரளவு தெரிந்து கொள்வோம். அந்த துறைகளை பற்றிய அறிவு நமக்கு கிடைக்கும். அந்த அனுபவ அறிவு இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் உங்களுக்கு உதவும்.
நடிகன் ஆவது எப்படி? தொழில் அதிபர் ஆவது எப்படி? இது போன்ற நூல்களை நீங்கள் படிப்பதை விட நடிகன் ஆக முயற்சி செய்யுங்கள், தொழில் அதிபர் ஆக முயற்சி செய்யுங்கள்.
ஒரு சினிமா இயக்குனரின், தயாரிப்பாளரின் மகன் பெரிய சினிமா ஹீரோ ஆவது சாதனை அல்ல. ஒரு போலீஸ் கான்ஸ்ட்டபிளின் மகன் கண்டெக்டராக, மூட்டை தூக்கும் கூலி காரனாக இருந்து பின்னர் ஒட்டுமொத்த தெற்காசிய சினாமாவிலும் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல் மிகப்பெரும் தொழில் அதிபராகவும் ஆனாரே அது சாதனை.
சினிமாவில் சாதித்த பலர் தொழில் துறை போன பொழுது சாதிக்கவில்லை.
உங்கள் அனைவருக்குள்ளும் எதோ ஒருவித தனித்தன்மை, திறமை இருக்கும். இயற்கையாக சிலருக்கு சில விஷயங்கள் வரும், சில வராது.
உங்களுக்கு இயற்கையாகவே எதில் திறமை இருக்கோ, எது வருமோ அதில் சாதிக்க முதலில் முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு வராத விஷயங்களிலும் நீங்கள் சாதிக்க விருப்பப்பட்டால். அதற்கு முதலில் செய்ய வேண்டியது பயிற்சி. அதன் பின்னர் தளர்ச்சி அடையா முயற்ச்சி. அதனால் இறுதியில் உங்களுக்கு கிடைக்கும் மன மகிழ்ச்சி, மகிழ்ச்சி.
எந்த ஒரு தொழிலை நாம் செய்தாலும் முழு மன நிறைவோடு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment