Saturday, 7 January 2017

இனிய குடும்பம் மற்றும் உறவுகளின் ரகசியங்கள் (Secrets for happy family and relationships in tamil)

இனிய குடும்பம் மற்றும் உறவுகளின் ரகசியங்கள் (Secrets for happy family and relationships in tamil for tamilan)


வெறும் பண்டிகைகளுக்கு காத்திருக்க வேண்டாம், ஒவ்வொரு கணமும் உங்கள் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்

உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதை மட்டுமே உங்களால் பகிர்ந்து கொள்ள முடியும்

உங்கள் குடும்பம் களிப்போடு இருக்க வேண்டுமென்றால், நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக மற்றும் அமைதியாக இருக்க வேண்டும்.
வாழும் கலை பயிற்சியில் சிறந்த சக்திவாய்ந்த சுவாச நுட்பங்கள் மற்றும் நடைமுறை ஞானத்தின் மூலம் மகிழ்ச்சியின் ஊற்று இருக்கும் இரகசியத்தை கற்றுகொள்ளுங்கள்

உங்கள் உணர்வுகளை போக விடுங்கள், அன்பை அல்ல.

உணர்வுகளின் புயல்களை எதிர்நோக்கும் போது, நாம் கூறிய வார்த்தைகளாலும், எடுத்த நடவடிக்கைகளினாலும் பின்னர் வருந்துகிறோம். ஏனெனில் கோபம், சோகம் மற்றும் எந்த எதிர்மறை உணர்வுகளையும் எப்படி கையாள வேண்டும் என்று பள்ளியிலோ அல்லது வீட்டிலோ கற்றுக் கொடுக்கப் படவில்லை

இங்குதான் , வாழும் கலை ஆனந்த அனுபவப் பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்பட்ட மூச்சுக் காற்றின் ஞானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனதில் ஒவ்வொரு தாள லயத்திற்கும், அதற்கேற்ப மூச்சின் தாள லயம் உள்ளது. எனவே, நீங்கள் நேரடியாக உங்கள் மனதைக் கையாள முடியாத போது, உங்கள் மூச்சின் மூலம் மனதைக் கையாள முடியும்.

No comments:

Post a Comment