Thursday, 12 January 2017

போகி, பொங்கல்,மாட்டுப்பொங்கல் சாமி கும்பிட நல்ல நேரம்

போகி, பொங்கல்,மாட்டுப்பொங்கல் சாமி கும்பிட நல்ல நேரம்

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் பண்டிகைக்கு பூஜை செய்து சாமி கும்பிட நல்ல நேரம் கணித்து அளிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பழைய பொருட்களை நீக்கிவிட்டு புதிய பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நாளை போகி திருநாளில் பழையவைகளை நீக்கி புதியவைகளை வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை
பொங்கல் பண்டிகை தை முதல்நாள் பொங்கல் வைக்க நல்ல நேரம் பகல் 11.00 - 12.00
மாட்டுப்பொங்கல் நாளில் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8.00 மணி முதல் 10 மணி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரை நல்ல நேரம்


No comments:

Post a Comment