Thursday, 12 January 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு அரை நிமிட விளையாட்டல்ல: தமிழகம் முழுவதும் தீவிரமடைகிறது போராட்டம்

By DIN  |   Published on : 12th January 2017 01:24 PM  |   அ+அ அ-   |  
Jallikattu
testjalli

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. மேலும் ஜல்லிக்கட்டுத் தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தமிழகத்தில் பல பகுதிகளில், கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் குதித்துள்ளனர். திரைத்துறையினரும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான கலைஞர்கள் தங்களது ஆதரவை பதிவு செய்து வருகிறார்கள்.

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாமக்கல்லில் நாளை பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு அரை நிமிட விளையாட்டல்ல; கிராமிய பொருளாதாரத்தின் இயக்கம் என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சமூக ஆர்வலர் பாலகுமாரன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 5000 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு விளையாட்டு ஜல்லிக்கட்டுதான். ஜல்லிக்கட்டினால்தான் கிராமிய பொருளாதாரம் இயங்குகிறது. இது அரை நிமிட விளையாட்டல்ல... என்று தெரிவித்தார்.

3 comments: