சாந்தோர்கரின் மகள் பிரசவ வலியால் துன்புற்றாராம்.
பாபா தக்க தருணத்தில் உதி அனுப்பிக் காத்தாராம்.
சில காலம் சென்றதும் மருமகனும் பேரனும் மேலுலகை அடைந்தனராம்.
சாந்தோர்கர் "உங்கள் ஆசி கிட்டிய பிறகும் இந்நிலை நேரலாமா?" என்றாராம்.
"பிறப்பதும் இறப்பதும் முன் கர்மாவின் பலன்.
அதை என்னால் மாற்ற இயலாது.
முன்கூட்டி நடப்பதை என்னால் அறிய முடிகிறது அவ்வளவே." என்றாராம்.
நானா,"பாபா! நான் சம்சார பந்தத்தை துறக்க விரும்புகிறேன்" என்றாராம்.
"நானா!துக்கத்தினால் நீ பிதற்றுகிறாய்.
இறுதிவரை அனைவருமே ஏதோ ஒரு தளையில் சிக்குகிறோம்.
மற்றவர்கள் துயரை ஏற்கும் எனக்கே அது ஒரு தளைதான்
உலகில் மனிதன் ஏற்ற தாழ்வுடன் வாழ்வதாக நீ நினைப்பாய்.
ஆனால் அவரவர் கர்மா படிதான் அவை அமைகின்றன.
மனிதனுக்குப் பகை, காம, க்ரோத,லோப,மோக,மத, மாச்சர்யம் ஆகியவை.
இந்த ஆறும் மாயையால் தோன்றுவதாகும்.
செல்வந்தர்கள் செடிகளைப்போல் பணிந்து நடக்க வேண்டும்.ஆனால் கொடியவர்களிடம் கடுமையாய் நடக்க வேண்டும்.
அற வழியில் பொருளீட்டி செலவு செய்ய வேண்டும்.
ஆனால் அளவுக்கு மிஞ்சி தானம் செய்ய வேண்டாம்.
பிறவிகளில் மானிட பிறவி உயர்ந்தது.
அதுதான் தன்னைப் படைத்தவனை ஆராதிக்கிறது
உருவ வழிபாடு சிறந்தது.
அதில்தான் மனம் லயித்து ஒரு நிலை படுகிறது
ஹரி "யார்" என்று அறியாமல் பண்டரிபுரம் செல்வது வீண்
பிறர் மதிக்க பக்தியை பறை சாற்ற செல்வது வீண்.
சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுங்கள்.
ஆசையை அடக்கி மனத்தை இருத்தி ஆத்மாவை தூய்மையாய் வைத்திருங்கள்.
நிம்மதி கிட்டும்"
இவ்வாறெல்லாம் பாபா செய்த போதனையால் நானா மனம் தெளிந்தாராம்
அடக்க வேண்டிய ஆறும் நாமெல்லாரும் கடக்க வேண்டிய ஆறு.
இந்த தத்துவ முத்துக்களை உதிர்த்த திரு பாபாவை வணங்குவோம்.

No comments:
Post a Comment