Monday, 16 January 2017

சாயி திரு அவதாரம்

அற்புதமான சாய் அவதாரம் வாழ்க்கைக்கு ஒரு ஆதாரம் தான் 

        திரு அவதாரம்
பத்ரி என்றொரு புண்ணிய நகராம் 
நகர் உறை ஹரி சாதே பெரும் வித்தகராம்;
வித்தகர் மணந்ததோ இலக்குமி என்பவராம;
இருவரும் ஒழுகிய மரபதில் அந்தணராம் ;
மழலை வரம் வேண்டி தவம் செய்தனராம்;
ஆங்கே சூரியனாய் உதித்தாராம் சாயி ராம்.
ஜாதகத்தைக் கணித்திடவே ஜோதிடரும் வந்தாராம்;
இம்மழலை தெய்வ அவதாரம் என்றனராம்;
ஆண் மூலம் அரசாளும் என்றவரும் சொன்னாராம் ;
விரைவில் பெற்றோர்க்கு முக்தி என்றாராம்;
பெற்றவர் பரமனை துதி செய்தனராம்;
கனவில் பரமனும் இதுவே சொன்னாராம்;
பாகிர் ஒருவர் வந்திடுவார் என்றாராம்;
மழலையை அவரிடம் கொடுக்கச் சொன்னாராம்;
மறுநாள் வந்தவர் மழலையை கேட்டாராம்;
அழுத குழவி அவரைக் கண்டதும் சிரித்தாராம்;
பரமன் சொன்ன பாகீர் இவரென்று உணர்ந்தனராம்;
கொடுத்தவன் கேட்கிறான் என்று நினைத்தனராம்;
மகிழ்வுடன் மழலையை அளித்தனராம்.
பெற்றவர் இருவரும் இறையடி அடைந்தனராம்

No comments:

Post a Comment