Friday, 13 January 2017

ரகுமானுக்கு மீண்டும் ஆஸ்கார்

ரகுமானுக்கு மீண்டும் 


ஆஸ்கார் 


ஜிங்கா’ என்ற ஹாலிவுட் படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் பீலே என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘ஜிங்கா’ என்ற ஹாலிவுட் படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி உள்ள நிலையில் அடுத்த (2017) ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் இந்த படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானின் இருவேறு பிரிவுகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
படத்தின் பின்னணி இசை, பாடல்களுக்கான இசையமைப்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. படங்களில் இடம்பெற்ற தனிப்பாடல்களுக்கான பிரிவில் ரஹ்மானின் பாடல்களுடன் சுமார் 140 பாடல்கள் மோதுகின்றன.
எனினும், ஸ்லம்டாக் மில்லியனைர் படத்துக்கு இசையமைத்ததற்காக கடந்த 2009-ம் ஆண்டு சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடலுக்கான இசை என்று ஒரே மேடையில் இரு ஆஸ்கர் விருதுகளை அள்ளிவந்த ரஹ்மான் வரும் ஆண்டிலும் ஆஸ்கர் விருதை வெல்ல வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment