பாட பாட தித்திக்கும் பாடல்
உறவாட வேண்டும் ம்ஹ்ம் ம்ஹ்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ஹ்ம் ம்ஹ்ம்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ஹ்ம்ம் ம் ம்ஹ்ம்ம்...
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும் ம்ம் ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்...
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..
மடிமீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்.. ம்ம்.. சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை விலை ஏதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர்
சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. உலகங்கள் நமையன்றி வேறேதுமில்லை வேறேதும் இல்லை ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..
------------------------------------------------------------------------
No comments:
Post a Comment