சில நாட்களுக்கு முன் தில்லியில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி [பத்மாவதி-ஸ்ரீனிவாச கல்யாண மஹோத்சவம்]நடந்தது. சனி மதியம் தொடங்கி, ஞாயிறு மாலை வரை நடந்த அந்நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ளும் பேறுபெற்றேன். அங்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவர் மிகவும் சோகமாகவும் ஆழ்ந்த கவலையிலும் இருப்பதாகத்தோன்றியது. அப்போது நான் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை.
ஞாயிறு காலை நிகழ்ச்சியின் நடுவே வெளியே வந்தபோது அவரும் பின்னே வந்தார். அவரது மனஅழுத்தத்திற்கான காரணமாக சொன்ன விஷயம் பற்றியது தான் இப்பகிர்வு…
பத்தாவது படிக்கும் மகன் ஒழுங்காகப் படிக்கவில்லை என வருத்தப்பட்ட அம்மா, “நீ ஒண்ணும் ஒழுங்காப்படிச்சு, மார்க் வாங்கற மாதிரி தெரியல… ஏதோ 70% எடுத்தா பெரிசு!” என்று பையனிடம் சொல்லிஇருக்கிறார். அதற்கு மகன், அப்படி நான் 90% அல்லது அதற்கு அதிகமாய் எடுத்துக் காட்டிவிட்டால் எனக்குஎன்ன தருவீர்கள் என்று கேட்க அம்மாவோ "சரி அப்படி அதிக மதிப்பெண் எடுத்தால், நீ எதைக் கேட்கிறாயோஅதைத் தருகிறேன்!" என்று சொல்லிவிட்டார். இந்த இடத்திலேயே தொடங்கி விட்டது பிரச்சனை…
மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் அவன் எடுத்தது 93.5% மதிப்பெண்கள். அது தெரிந்ததும் பையன் அம்மாவிடம் கேட்டது என்ன தெரியுமா? பதினாறு வயதே ஆன, இன்னும் ஓட்டுனர் உரிமம் கூடவாங்க முடியாத வயதில் அவன் கேட்டது 135 சிசி பல்சர் பைக்.
அவனை 18 வயசு வரை பொறுத்திருக்கச் சொன்னதற்கு முடியாது என பிடிவாதம் பிடிக்க, அவர்களும் வேறுவழியின்றி வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இப்போது ட்யூஷன் செல்லும்போது பைக்கில் தான் செல்கிறாராம்அந்த பையர்… அத்தனை வேகமாக, அதுவும் பல லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் தில்லியில்பைக்கில் சாகசங்கள் செய்கிறார். இப்போது பின் சக்கரம் கீழே இருக்க, முன் சக்கரத்தை மேலே தூக்கியபடிஎல்லாம் செய்து காண்பிக்க, அவரது தம்பி அதைப் படம் பிடிக்கிறார். அப்பா-அம்மா இருவரும் அலுவலகம்சென்றுவிட, ஓரிரு முறை பள்ளிக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இப்படி வண்டி ஓட்டுவதால் என்ன பிரச்சனை வருமோ, பையனுக்கு ஏதாவதுவிபத்து ஏற்பட்டு விடுமோ என்று இப்போது பயந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
சமீபத்தில் ஹைதையில் நடந்த விபத்தில் மரணமடைந்த பிரபல கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகன் பற்றிச்சொல்லி, பையனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச்சொன்னதற்கு அவர் பையன் சொன்ன பதில்… “அப்பா,அந்த பையனுக்கு அப்படி நடந்ததுன்னா எனக்கும் அப்படி நடக்குமா என்ன? மேலும் எனக்கு வாங்கியது வெறும்135 சிசி, அந்த பையன் வைத்திருந்தது 1000 சிசி… அவ்வளவு வேகமா எல்லாம் இந்த பைக் போகாது!”.
இவ்வாறெல்லாம் என்னிடம் சொல்லி புலம்பிய அவரிடம் நான் கேட்டேன், “இப்ப மனசால கஷ்டப்பட்டுஎன்னங்க புண்ணியம், வாங்கிக் கொடுத்தது உங்க தப்பு, கண்டிப்பாக 18 வயது முடிந்தபின் தான் வாங்கிக்கொடுப்பேன்” என்று அப்போதே சொல்லி இருக்க வேண்டியது தானே!" என்றேன். வாங்கிக் கொடுப்பதையும்கொடுத்துவிட்டு இப்போது மன அமைதி இழந்து சஞ்சலப்பட்டு என்ன பலன்? வருமுன் காப்பதல்லவா விவேகம்.
15-20 வருடங்களுக்கு முன் கூட சிறுவர்களுக்கு கேட்டதல்லாம் கிடைத்ததில்லைபெற்றோர்களிடமிருந்து. குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்களின் தவறுஎன்றுதான் நான் நினைக்கிறேன். என்னதான் 16 வயது ஆகிவிட்டாலும், நல்லது-கெட்டது தெரியாத வயது தான்அது. பெற்றோர்கள் தான் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அதை விட்டு, கேட்டதை வாங்கிக்கொடுத்து விட்டு, பிறகு கஷ்டப்பட்டு என்ன ஆகப்போகிறது.
No comments:
Post a Comment