பல பேரை, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக கொண்டாடப்படுவது என்று எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக காணும் பொங்கல் என்பது ஆறு, கடல், நீர்வீழ்ச்சி என நீர் நிலைகளை ஒட்டியே கொண்டாடப்படுகிறது.
பொதுவாக காணும் பொங்கல் என்பது ஆறு, கடல், நீர்வீழ்ச்சி என நீர் நிலைகளை ஒட்டியே கொண்டாடப்படுகிறது.
|
மற்ற ஊர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோ அல்லது சுற்றுலாத் தலமோ அல்லது பரந்த வெளியோ காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் கூடும் இடங்களாக உள்ளன.
பேருந்து, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் என நவீன வசதிகள் இல்லாத காலத்தில், மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதே இதுபோன்ற பண்டிகை நாட்களில்தான் எனலாம்.
மாமன், மைத்துனர், அத்தை, பாட்டி, சித்தி, பெரியப்பா, சித்தப்பா, ஒன்னு விட்ட அத்தை, பங்காளி என குடும்பத்தின் அல்லது அந்த ஊரின் பெரியவர்கள் வரை சிறியவர்கள் வரை, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம் சார்ந்த சந்திப்பாக காணும் பொங்கல் அமைந்துள்ளது.
போன வருடம் காணும் பொங்கல் தினத்தன்று இதே இடத்தில் வந்த போது ஒருவராக இருந்த நாம், இப்போது இருவராகி விட்டோம் என்றெண்ணி குதூகலிப்பதுடன், அடுத்த காணும் பொங்கலுக்கு குழந்தையுடன் வர வேண்டும். அதற்கு இந்த நீர் நிலையே சாட்சி என்று காவிரி போன்ற ஆறு அல்லது நீர் நிலைகளில் விளக்குகளை மிதக்க விடுவதும் உண்டு.
தவிர, தங்கள் வீடுகளில் உறவுகள் இவ்வளவு பேர் உள்ளனர் என்று பங்காளிகளுக்கு பலத்தைத் தெரிவிக்கவும், எங்கள் வீட்டில் திருமண வயதில் பையன்கள், பெண்கள் உள்ளனர் என்பதை சூசகமாக உணர்த்தவுமே இந்தப் பண்டிகை என்றால் மிகையாகாது.
இன்றைய கால கட்டத்தில் திருமண தரகர்கள் தொடங்கி திருமணப் பதிவு நிலையங்கள், சமுதாயத்திற்கு ஒரு அமைப்பு என்றெல்லாம் நாகரீகம் பெருகி இண்டர்நெட் வரை கல்யாண மாலைகள் உலகெங்கும், பரந்து விரிந்து விட்டன.
என்றாலும் காணும் பொங்கல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு காணும் பொங்கலுக்கு தயாராகி விட்டீர்களா?
No comments:
Post a Comment