Tuesday, 24 January 2017

மாணிக்க வீணை ஏந்தும் - பாடல்

சரஸ்வதி வந்தனம்

மாணிக்க வீணை ஏந்தும்................. மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்...

----------------------------------------------------------------

No comments:

Post a Comment