Thursday, 12 January 2017

பொங்கலோ பொங்கல்|பொங்கல் திருநாள் சிறப்பு கட்டுரை.!

https://www.youtube.com/watch?v=qnBFTTEtO7w

Please refer the above you tube to see pongal kolam

பொங்கலோ பொங்கல்|பொங்கல் திருநாள் சிறப்பு கட்டுரை.!



Written by Niranjana 


14.01.2017 அன்று தைப் பொங்கல்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்அந்தஅளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள்அன்றுசூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாகபெற்றுவருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.

ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரியபகவானுக்கே உண்டுசூரியபகவானின்அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்றுசூரியனைவணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும்மழைபனிவெப்பம் இவை அனைத்தும் சூரியபகவானின் சஞ்சாரத்தால்தான்உண்டாகுகிறது என்கிறது சாஸ்திரம்அதுபோல சிவன்விஷ்ணுசக்திதேவிஇவர்களுக்கு வலது கண்ணாக சூரியபகவான் இருக்கிறார் என்கிறது புராணம்.

ஒம்” என்ற சக்தி வாய்ந்த பிரணவ மந்திரத்திலிருந்து உருவானவர் சூரியபகவான்என்கிறது மார்க்கண்டேய புராணம்சூரியபகவானை வணங்கினால் பித்ருதோஷம்நீங்கும்தேவர்களின் ஆசி கிடைக்கும்விரோதம் மறையும்.

சூரிய பகவான்

பொங்கல் திருநாள் அன்றுசூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பலநன்மைகள் ஏற்படும்நம்மை காக்கவே சூரியபகவான் எந்நேரமும்காத்திருக்கிறார்அதனால்தான் தினமும் நாள் தவறாமல் சரியான நேரத்தில்வானத்தில் ஆஜராகி விடுகிறார்.

முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவருக்கு தொழு நோய் ஏற்பட்டதுஇறைவனை வணங்கியும் நோய் நீங்கவில்லை. “செய்த பாவம் அனுபவிக்கவேண்டும்அது உன் விதிஎன்று கூறிவிட்டார் பிரம்மதேவன்தன் நோய்குணமடைய வரம் வேண்டிநவகிரகங்களை நினைத்து வழிபட்டார் காலவமுனிவர்.

நவகிரகங்கள் காலவ முனிவருக்கு உதவ முன் வந்தனர்இதில் முனிவரின்பக்தியை பாராட்டிமுனிவரின் முன்ஜென்ம விதியின்படி அனுபவிக்க வேண்டியபாவங்களை போக்கிமுனிவரை பரிபூரணமாக குணப்படுத்தினார் நவகிரகங்களின்தலைவரான சூரிய பகவான்.

அதனால் பிரம்மதேவனின் சாபத்திற்கு ஆளானார் சூரியபகவான்தான்கஷ்டபட்டாலும்தன்னை வணங்கும் பக்தர்கள் கஷ்டப்படக்கூடது என்ற உயர்ந்தஎண்ணத்தில் தோஷங்களையும் கர்மாக்களை நீக்கிநல்வாழ்வு தர சூரியபகவான்எந்நேரமும் நமக்கு அருள்புரிய காத்திருக்கிறார்அப்படிபட்ட உயர்ந்த குணம்கொண்ட சூரியபகவானை வணங்கிநன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல்திருநாள்.

இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்துபொங்கல் பானையிலோ அல்லதுகுக்கரிலோ பொங்கல் செய்ய வேண்டும்பிறகு வடைபாயசம், 21 வகையானகாய்கறிகளை கொண்டு சமைத்துசூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்துஅத்துடன் மஞ்சள்கொத்துஇஞ்சிகொத்துகரும்பும் வைத்துசூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டிவணங்க வேண்டும்.

சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால்இன்னும் சிறப்புஇப்படி முறையாக மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளைகொண்டாடிசூரிய பகவானின் கருணை பார்வையை பெற்று பல்லாண்டுபல்லாண்டு தலைமறை தலைமறையாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

மாட்டு பொங்கல்

பொங்கல் திருநாள் அன்று செய்து வைத்திருந்த வெள்ளை சாதத்தையும்சர்க்கரைபொங்களையும் சமைத்தவுடன்அதை பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துமறுநாள் மாட்டு பொங்கள் அன்று பூஜை செய்ய வேண்டும்.

மாட்டு பொங்கல் அன்று கனு பூஜையின் சிறப்புகளை பற்றி இப்போது பார்ப்போம்.

வருடம் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்போட்டதை தின்று விட்டுஉழைக்கும் அப்பாவி குணம் படைத்த ஜீவராசிதான் மாடுஅதனால்தான் “பாழாய்போனது பசு வாயில்” என்பார்கள்மாட்டுபொங்கல் அன்றுமாட்டை நன்றாககுளிப்பாட்டிஅதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசிஅதன் காலில் சலங்கை மாட்டிஅழகுபடுத்துவார்கள்.

அத்துடன் மாடுகளுக்கு பூஜை செய்துஅதன் கழுத்தில் மாலைபோட்டுவஸ்திரம்அணிவித்து பூஜை செய்து பிறகுபசுமாடு அணிந்திருந்த மலர் மாலையை வீட்டின்தலைவாசலில் கட்டினால்அந்த வீட்டில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும்.

மாட்டுபொங்கல் அன்று கன்னி பெண்கள்சுமங்கலி பெண்களிடம் இருந்துபொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சலை வாங்கிஅந்த மஞ்சளை அரைத்துதினமும் பூசி வந்தால்அந்த மஞ்சள் கரைவதற்குள் அந்த கன்னி பெண்ணுக்குதிருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

அத்துடன்அந்த காலத்தில் பெரியவர்களின் அறிவுரைபடி பெண்கள் கீழ்கண்டபாடலை பாடியபடி மஞ்சல் அரைத்து பூசுவார்களாம்.

அந்த பாடல்….
மக்களைப் பெற்றுமனையைக் கட்டி
மக்கள் வயிற்றிலே பேரன்பிறந்து,
பேரன் வயிற்றிலே பிள்ளையைப் பார்த்து,
கொட்டில் நிறையப் பசுமாடும்,
பெட்டி நிறைப் பூஷணமுமாக,
தழையத்தழைய தாலிகட்டி
புருஷனோடு பூவும்பொட்டுமாக
நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழணும்
என்ற இந்த பாடலை பெண்கள் பாடியபடி மஞ்சல் பூசிக்கொண்டால்இந்த பாடலில்இருக்கும் நல்ல சொல்லுக்கு ஏற்ற வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

மாட்டு பொங்கல் அன்றுதோட்டத்திலோ அல்லது மாடியிலோ ஒரு இடத்தைசுத்தமாக பெருக்கி கோலம் போட்டுஅந்த இடத்தில் வாழை இலை போட்டுஅந்தவாழையிலையில் பொங்கல் திருநாள் அன்று எடுத்து வைத்திருந்த சர்க்கரைபொங்கலை உருண்டையாக செய்து கொண்டுதனியாக வைத்திருக்க வேண்டும்.

பிறகு பொங்கல் திருநாள் அன்று எடுத்து வைத்திருந்த வெள்ளை சாதத்தைமூன்று பங்காக பிரித்துமுதல் பங்கில் தயிர் சாதமும்இரண்டாவது பங்கில்மஞ்சள்பொடி தூவிய மஞ்சள் சாதமும்மூன்றாவது பங்கில் குங்குமம் கலந்தசிவப்பு சாதமும் செய்ய வேண்டும்.

அந்த சாதங்களை தனி தனியாக 5 அல்லது, 7 அல்லது, 9 அல்லது, 11 எண்ணிக்கைகொண்ட நெல்லிகனி அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்அந்தஉருண்டைகளை வாழையிலையில் வைக்கும் போது, “காக்காய் பிடி வைத்தேன்கனுப்பிடி வைத்தேன்காக்கை கூட்டம் போல எங்கள் குடும்பமும் ஒற்றுமையாகஇருக்க வேண்டும்என்று கூறிகொண்டே வைத்துஅத்துடன் கரும்புதுண்டு,மஞ்சள்கொத்துவெற்றிலை பாக்குபூ வைத்து சூரியபகவானை மனதால்நினைத்தும்குலதெய்வத்தையும்இஷ்டதெய்வத்தையும் வணங்கி பூஜை செய்யவேண்டும்.

சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு

இந்த பூஜையின் சிறப்பு என்னவென்றால்பெண்கள் தங்களின் “சகோதரர்கள்தங்களுடன் ஒற்றுமையாகவும்தன் மேல் பாசமாகவும் இருக்க வேண்டும்அத்துடன் அவர்களும் சுபிக்ஷமாக குடும்பத்தோடு இருக்க வேண்டும்” என்றுஇறைவனிடம் மாட்டு பொங்கல் தினத்தில் இப்படி கனுபிடி வைத்து கனு பூஜைசெய்வார்கள்.

இந்த கானு பொங்கல் பூஜை செய்யும் வழக்கம் இருப்பவர்கள் மட்டும் செய்தால்போதும்அல்லது குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம்கனு பூஜை செய்யலாமாஎன்ற கேட்டு செய்யலாம்குடும்ப வழக்கம் இல்லாத பூஜைமுறைகளைகடைபிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

பொங்கல் அன்று சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு பரிசுகளை தருவார்கள்சகோதரர் தரும் பரிசுக்கு கிராமபுறங்களில் இன்றும் மதிப்பு இருக்கிறதுபிறந்தவீட்டில் சகோதரன் தருகிற பரிசில்தான் புகுந்த வீட்டில் அந்த பெண்ணுக்குகௌரவம் தருகிறதுஅதனால்தான் எந்த நாட்களிலும் உதவி செய்யாதசகோதரனும்பொங்கல் திருநாளில் தன் சகோதரிக்கு பொங்கல் பரிசு தருவதைமட்டும் நிறுத்த மாட்டார்கள்.

குற்றம் பார்கின் சுற்றம் இல்லை என்பார்கள்எந்த விஷயத்தையும்பெரிதுப்படுத்தாமல் அமைதியாக இருந்து மறப்போம் – மன்னிப்போம் என்றகொள்கையை கடைபிடித்துஉறவினர்களிடத்தில் கசப்பான அனுபவங்கள்இருந்தால்தித்திப்பான சர்க்கரை பொங்கலை பரிமாறி கொண்டு நல்லுறவைகட்டிகாக்கவேண்டும்.

அதனால்தான் உழவர் திருநாள் அன்று நண்பர்களையும்உறவினர்களையும்சந்தித்துஅவர்களுடன் சுற்றுலா போன்ற பொழுதுபோக்கான இடங்களுக்குசென்றுதங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள்இதற்கு காரணம்பார்க்காத பயிரும்கேட்காத கடனும் பாழாகிவிடும் என்பது போல்வருடம்முழுவதும் உறவினர்களையும் – நண்பர்களையும் சந்திக்காமல் இருந்தால்அவர்களின் நினைவுகள் காலத்தால் மறக்கப்படும்.

அப்படி அவர்களை மறக்காமல் இருக்கவே இதுபோல பண்டிகை நாட்கள்வருகிறதுஇப்படிபட்ட பண்டிகை திருநாட்களில் அவர்களுடன் கொண்டாடிநம்முடைய மகிழ்ச்சிகளையும் பேசி மகிழ்ந்தால்அந்த மகிழ்ச்சியான நாள்வருடம் முழுவதும் பசுமையாக நிலைத்திருக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கேற்பபொங்கல் பண்டிகையைமகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடிபூஜை செய்து எல்லா யோகங்களையும்பெற்றுசிறப்பு பெறுவோம்.

No comments:

Post a Comment