குரு மகிமை
வாழ்க்கையில் முன்னேறணும், நற்கதியை அடையணும்னா அதுக்கு குரு கடாட்சம் வேணும். கடவுள்கிட்ட, ‘இவர்களுக்கு நற்கதியை கொடு’னு recommend பண்றவர் சாட்சாத் குருதான். குருவை நாம தெய்வமாதான் பார்க்கணும். நமக்கு அறிவைக் கொடுப்பது நம் ஆசிரியர்கள், ஞானத்தைக் கொடுப்பது குருதான். பல சமயங்களில் குருவே ஆசிரியர்களாகவும் விளங்குவார்கள்” என்றார், ‘குருமகிமை’ என்ற தம் சொற்பொழிவில் பி.சுவாமிநாதன்.
“நமக்கு எது சரி, எது தப்பு, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாதுன்னு தெரியறது. ஆனா, தெரிஞ்சே பல தப்புகளை நாம செய்யறோம். ஒரு தவறு பண்ணினோம்னா நிச்சயம் தண்டனை கிடைக்கும். தண்டனை கிடைச்சப்பறம் நாம இப்படி பண்ணிட்டோமேன்னு நினைச்சு வேதனைப்படறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. இதெல்லாம் சரி; இதெல்லாம் தப்புன்னு நமக்கு யாரு சொல்லிக் கொடுத்தா? நம் முன்னோர்கள்தான். குருவா இருந்து நாம இதெல்லாம் கடைபிடிக்கணும்னு அவர்கள்தான் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கா. அவர்கள் சொன்ன வழியில், அவர்கள் காட்டிய பாதையில் நாம அப்படியே நடந்து போய்ட்டா போதும்; வருத்தம் என்பதே வராது.
காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் மகா பெரியவாளுக்கு வாய்ல புண்ணு வந்து அவரால பேசவே முடியாத நிலை. காஞ்சிபுரத்துலேயே இருந்த ஒரு மாமி இப்படி பெரியவா வாய்ல புண்ணோட கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கறத பார்த்துட்டு, வீட்டுக்குப் போயி பாலை காய்ச்சி அதுலேர்ந்து வெண்ணெயை எடுத்து வந்து பெரியவாகிட்ட கொடுத்தா. பெரியவா, ‘என்ன விசேஷம் இன்னிக்கு கிருஷ்ண ஜயந்தி இல்லையே... எதுக்கு வெண்ணெய்?’னு கேட்டார். ‘நீங்க வாய் புண்ணோட கஷ்டப்பட்டுண்டு இருக்கீங்க. இந்த வெண்ணையை நீங்க வாய்ல வெச்சுண்டா போதும், உங்க வாய்ப் புண் சரியாயிடும்னு வெண்ணெய் பண்ணி கொண்டு வந் தேன்’னு சொல்லி மாமி தொன்னையோட இருந்த வெண்ணெய பெரியவா முன்னாடி வெச்சா. அப்போ திடீர்னு ஒரு குழந்தை ஒன்றரை வயது இருக்கும். ஓடி வந்து பெரிய வாளை பார்த்து சிரிச்சது. பெரியவா ‘என்ன வேணும்’னு அந்தக் குழந்தைகிட்ட கேட்டதும், ‘அந்த வெண்ணெய் வேணும்’னு சொல்ல, பெரியவா அப்படியே தொன்னையோட குழந்தைக்கிட்ட கொடுத்துட்டார்.
குருவின் மீது சிரத்தையான பக்தி பண்ணணும். குரு அருள் கிடைச்சிட்டா போதும் திருவருள் நிச்சயம் கிடைச்சிடும். ஏகநாதருக்கு ஜனார்த்தன ஸ்வாமிதான் குரு. அப்படி ஒரு குரு பக்தி ஏகநாதருக்கு. குரு என்ன சொல்றாரோ அதை அப்படியே கேட்பார். ஜனார்த்தன ஸ்வாமிக்கு அதனாலேயே ஏகநாதர் மேல தனி பிரியம். கைங்கர்ய காரியங்களுக்கு அதனாலே ஏக நாதரை அவர் சேர்த்துண்டார். தினமும் அவர் வழிபடும் அவரோட குருவான தத்தாத்ரேயர் சிலைக்கு தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்யறதுக்கும் சரி; நிவேதனம் செய்ய தேவையான பலகாரம் செய்யறதுக்கும் சரி; ஏகநாதரை கோதாவரிலேர்ந்து தண்ணீர் எடுத்து வர சொல்லி, அதனாலேயே கேட்பார்.
குரு வார்த்தைக்கு மறுவார்த்தை பேச மாட்டார் ஏகநாதர். குரு சொன்னதால் தினமும் பக்தி சிரத்தையோடு கோதாவரிலேர்ந்து பெரிய குடத்துல ஜலம் எடுத்து வந்து கொண்டிருந்தார் ஏகநாதர். ‘இவ்ளோ சிரத்தையா இந்த சிஷ்யன் இருக்கிறானே, இவனுக்கு தெய்வ தரிசனத்தை காண்பிக்கணும்’னு முடிவு பண்ணி ஜனார்த்தன ஸ்வாமி, மானசீகமா தத்தாத்ரேயரை நினைச்சு ‘ஏகநாதர் போற வழியில் இருக்கும் ஆல மரத்தின் மீது நீங்க உட்கார்ந்து கொண்டு, ஏகநாதர் ஜலம் கொண்டு வரும்போது கீழே வந்து அவருக்கு தரிசனம் தரணும்’னு கேட்டுக்கறார்.
அடுத்த நாள் ஏகநாதர் கோதாவரிலேர்ந்து தண்ணீர் எடுத்துண்டு வரும்போது தத் தாத்ரேயர் மரத்து லேர்ந்து கீழே குதிச்சு வந்து மூன்று முகத்தோட (சிவன், பிரும்மா, விஷ்ணு) தரிசனம் தர ஏகநாதர், ‘என் குருவுக்கு நான் ஜலம் எடுத்துண்டு போகணும், நேரம் ஆகறது’ங்கறர். உடனே தத்தாத்ரேயர், ‘நான் யாருன்னு தெரியலியா?’னு கேட்க, ‘நீங்க யாரா இருந்தா எனக்கென்ன? என் குருவுக்கான பணிகளை செய்ய நான் போயிண்டு இருக்கேன்’னு சொன்னார் ஏகநாதர். அவரோட குரு பக்தியை மெச்சி, அவருக்கு ஆசி கொடுக்கிறார் தத்தாத்ரேயர்.
அன்னிக்கு அபிஷேகத்தை எல்லாம் முடிச்சிட்டு ஏகநாதரைப் பார்த்து, ‘இன்னிக்கு தரிசனம் ஆச்சானு’ கேட்கறார் ஜனார்த்தன ஸ்வாமி. ‘நான்தான் தினமுமே பார்த்துண்டே இருக்கேனே’னு சொல்றார் ஏகநாதர். ‘வழியில் மூன்று முகத்தோட வந்தவரை நீ பார்க்கலியா’ன்னு அவர் கேட்க, ஏகநாதர், ‘எனக்கு கடவுளே நீங்கதான். என்னிக்காவது கடவுளை என் முன்னாடி கொண்டு வந்து நிறுத் துங்கோன்னு நான் கேட்டிருக்கேனா?’ என்கிறார் ஏகநாதர்.
தத்தாத்ரேயர் தரிசனம் கிடைக்க தவமிருக்கா பல பேர். அந்த தத்தர் தரிசனம் தந்த போதும், தம் குரு சொல்லே முக்கியம்னு இருந்தார் ஏகநாதர். அந்த குரு பக்திதான், தத்தாத்ரேயரை தரிசனம் தர வைச்சது.
அப்படியொரு குரு பக்தி நமக்கெல்லாம் அமைந்தாலே, நம்மோட வாழ்க்கை அர்த்தமுள்ளதா அமையும். நமக்கு மட்டுமல்ல; நம்மோட சந்ததிகளுக்கும்!
பஞ்சமி: விசேஷமான திதி . ‘பஞ்சமம் காரியசித்தி’ என்றும் சொல்வார்கள். ஆற்றலின் வடிவான வாராஹியை பூஜிக்கச் சிறந்த நாள் பஞ்சமி. அதனால், பஞ்சமி என்றும் அவளுக்குப் பெயருண்டு.
No comments:
Post a Comment