சாரதா தேவி
'உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே. உன் குறைகளையே பார். உலகத்திலுள்ள எல்லோரையும் உனதாக்கிக் கொள். யாருமே அன்னியர் அல்லர். உலகம் முழுவதும் உனது உறவே!''
மரணப் படுக்கையில் இருந்தபோது கடைசியாய் அவர் உலகிற்கு அளித்த வார்த்தைகள் அவை. அவரது வாழ்க்கை முழுவதுமே ஆன்மிகப் பாதையில் தான் இருந்தது. ஆனால், அதைப் பார்த்த சாதாரண மக்களுக்கு அவரது வாழ்க்கை வினோதமாகப்பட்டது. அவர் அன்னை சாரதா தேவி.
இந்தியாவின் மனோன்னதமான மகா புருஷர்களின் பரம்பரையில் வந்த மகான்களில் ராமகிருஷ்ண பரமஹம்சர் முக்கியமானவர். அதி அற்புதங்களால் மக்களை கவர்ந்த மகான்களுக்கு மத்தியில் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த யதார்த்த வடிவங்களின் இறைத்தத்துவத்தை விளக்கிக் காட்டியவர் ராமகிருஷ்ணர்.
அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அன்னை சாரதா தேவி. ராமகிருஷ்ணரின் மனைவியாக மட்டுமல்லாமல் அவரது முதல் சீடராகவும் இருந்தார். பின்னால் வந்து சேர்ந்த சீடர்களுக்கு எல்லாம் நல்ல தாயாகவும் விளங்கினார்.
மேற்கு வங்காளத்தில் வயலும் வாய்க்காலுமாகப் பசுமை படர்ந்திருந்த அழகிய கிராமம் ஜெயராம்பாடி. அங்கு வாழ்ந்த ராமச்சந்திர முகர்ஜி - சியாம சுந்தரி தம்பதியரின் மகள் சாரதா தேவி. முதலில் அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தாகூர் மணி என்பது, பின்னாளில் சாரதா மணியாக மாற்றப்பட்டது. ஆன்மிக வாழ்க்கையில் நாட்டம் கொண்டபோது அவரே சாரதா தேவியாக அழைக்கப்பட்டார்.
காமார்புகூரில் பிறந்து தட்சினேணவரத்தில் வாழ்ந்த பரம ஹம்சர் ராமகிருஷ்ணரின் இறைநாட்டம் பரவலாக வெளிப்பட்ட காலத்தில் அவரது நடவடிக்கைகளைக் கண்டவர்கள் அவரது மகிமையை உணர்ந்தாரில்லை. அவரது சித்த புருஷ நிலையைப் பைத்தியம் பிடித்து விட்டதாகக் கருதி வருத்தமுற்றனர். அதனால் அவரது தாயும், சகோதரரும் அவருக்குத் திருமணம் செய்வதால் பைத்தியம் தெளியும் என்று கருதினர். விளைவு அவருக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. ஆனால், ஒரு பொருத்தமான பெண் அமையாமல் தள்ளித் தள்ளிப் போனது. இதனால் அவர்கள் வருத்தமுற்றனர்.
No comments:
Post a Comment