Saturday, 28 January 2017

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா! நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா! அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா! - நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா! நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? - தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு? - நீ கொண்டு வந்ததென்னடா? மீசை முறுக்கு! நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி... அதனருகினில் ஓலை குடிசை கட்டி... பொன்னான உலகென்று பெயருமிட்டால்? இந்த பூமி சிரிக்கும்! அந்த சாமி சிரிக்கும்! நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா... உண்டு உண்டு என்று நம்பிக் காலை எடு! - இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு! ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து! - அதில் நீதி உன்னைத் தேடி வரும் வாளைத் தொடுத்து! நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா...

Wednesday, 25 January 2017

இன்பம்

இன்பம் 

இவ்வுலகில் எல்லோரும் தேடி தேடி அலைவது இன்பதிர்காகதான் .....
நீங்கள் நம்புகின்றீர்களா ? 
நான் நம்புகிறேன் நிச்சயமாக ஆம் என்றுதான் பதில் வரும்.

நான் ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் இன்பம் அத்தை அடைவதற்காக மனிதன் என்னனவோ செய்து பார்க்கிறான் ......ஆனால் அந்த இன்பத்தை அடைந்தவரை நீங்கள் பார்திருகின்றீர்களா ? என்றால் பதில் ஆம் என்று மிக குறைவே குறை தொனி உடன் வரும்.

ஆம்....
இன்பத்தை அடைந்தவர் அல்லது அனுபவிபவர்கள் மிக சிலரே ......

நாம் இன்பம் என்றால் என்ன என்பதை தெரிந்திருக்க வேண்டும் .

வள்ளுவன் சொற்படி  இ ன்பத்தில் மூன்று வகை .

1. அறத்து பால் 
2.. பொருட்பால் 
3. காமத்து பால் அல்லது இன்பத்து பால்        

அனால் இன்னொரு மூன்றும் உள்ளது  அந்த இன்பம் யாதெனில்

அ . துன்பம் மறப்பது ஒரு இன்பம்
ஆ . சிற்றின்பம்
இ . பேரின்பம்    

துன்பம் மறப்பது இன்பம்

தாகத்திற்கு தண்ணீர் குடித்தால் சுகம் தான் , அனால் அதுவே இன்பமகிவிடது .

ஆனால் இன்று நிறைய பேர் துன்பம் பொகுதலையே இன்பமாக கருதுகின்றனர்



சிற்றின்பம்

நமக்கு இந்து புலன்கள் உள்ளது . அவை மெய்,வாய், கண், மூக்கு செவி .. இந்த புலன்களின் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இன்பங்களை அனுபவித்தால் அதன் அளவிலே இன்பம் அதிகமாகும் .

அதே போல் ஐந்து புலன்களும் இன்பங்களை அனுபவித்தால் அதுதான் சிற்றின்பமாகும் .

பேரின்பம்

மேற்கூறிய சிற்றின்பத்திற்கு பின்னால் நிறைய சந்தோசம் என்றெண்ணி உலகம் ஓடுகிறது. அப்படிஎன்றல் பேரின்பம் என்பது எவ்வளவு சுகமானது, அத்தை விவரிக்க வார்த்தை இல்லை.

அந்த பேரின்பத்தை அடைய இரவினை நினைத்து ஒவ்வொரு வேலையையும் செய்தாலே போதும் .

அந்த பரமாத்மாவை நினைத்து நினைத்து பேரின்பத்தை எல்லோரும் பெறுவோமாக ........வாழ்த்துக்கள் .........                                                                                                                                                                                                                                                                                                                        


வெற்றி என்பது ............

இந்த பக்கத்தில் வெற்றி என்பது என்ன என்பதி பற்றி மிகவும் தெல் தெளிவாக கொஞ்சமாக எழுதியிருக்கிறேன்.

எல்லோரும் வெற்றி என்பது இலக்கு என்று நினைதிருகிறார்கள் . அனால் உண்மை அதுவல்ல .

சரி.  வாருங்கள் .

ஒரு இன்ப சுற்றுலா செல்வோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த இன்ப சுற்றுலாவின் மிகவும் கடைசியான தலம் செல்வதுதான் குறிக்கோளா அல்லது அதன் பயணங்களை ரசிப்பது குறிக்கோளா ......

நிச்சயமாக இரண்டாவது உள்ளது தான் .....ஆம் பயணத்தை ரசிபதுதான் .

அது போல் தான் வெற்றி என்பது ஒரு கடைசி இடம் அல்ல . வெற்றியை தேடும் விதம் மிகவும் முக்கியமானது ஆகும்

அப்பொழுது தான் அந்த வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியும்.
வெற்றி என்பது அடுத்தவர்களை முந்தி செல்வது அல்ல .....அடுத்தவர் பொருளை அல்லது எதோ ஒரு விதத்தில் ஏமாற்றி பொருள் சம்பாதிப்பது அல்ல ..வெற்றி என்பது நல்வழியில் நமது குறிக்கோளை எப்பாடு பட்டேனும் அடைவதே யாகும் .........

வளர்ச்சியே வாழ்க்கை
வெற்றி என்பது வளர்ச்சியே

சுபம் !

Tuesday, 24 January 2017

CELINE DION LYRICS - "I'm Alive"

CELINE DION - I'm Alive




Mmmmmm ... Mmmmmm ...

I get wings to fly
Oh, oh ... I'm alive ... Yeah

When you call on me
When I hear you breathe
I get wings to fly
I feel that I'm alive

When you look at me
I can touch the sky
I know that I'm alive

When you bless the day
I just drift away
All my worries die
I'm glad that I'm alive

You've set my heart on fire
Filled me with love
Made me a woman on clouds above

I couldn't get much higher
My spirit takes flight
'Cause I am alive

When you call on me
(When you call on me)
When I hear you breathe
(When I hear you breathe)
I get wings to fly
I feel that I'm alive
(I am alive)

When you reach for me
(When you reach for me)
Raising spirits high
God knows that...

That I'll be the one
Standing by through good and through trying times
And it's only begun
I can't wait for the rest of my life

When you call on me
(When you call on me)
When you reach for me
(When you reach for me)
I get wings to fly
I feel that.......

When you bless the day
(When you bless, you bless the day)
I just drift away
(I just drift away)
All my worries die
I know that I'm alive

I get wings to fly
God knows that I'm alive

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

மனதை கவரும் தெய்வீக கானம்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (புல்லாங்குழல்) பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல்)

நன்றி!

மாணிக்க வீணை ஏந்தும் - பாடல்

சரஸ்வதி வந்தனம்

மாணிக்க வீணை ஏந்தும்................. மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்...

----------------------------------------------------------------

Hanuman Chalisa in Tamil ஹனுமான் சாலிசா

வாசகருக்கு விருப்பபடி ஹனுமான் சாலிசா தமிழில் 

தோஹா

ஶ்ரீ குரு சரன ஸரோஜ ரஜ னிஜமனு முகுரு ஸுதாரி 
பரனஊ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி 
புத்திஹீன னனு ஜானிகே ஸுமிரௌ பவன குமார 
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ பிகார் 

த்யானம்

கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் 
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் 
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்த காம்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் 

சௌபாஈ

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர 
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1

ராமதூத அதுலித பலதாமா 
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 

கம்சன வரண விராஜ ஸுவேஶா 
கானன கும்டல கும்சித கேஶா || 4 

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை 
காம்தே மூம்ஜ ஜனேஊ ஸாஜை || 5

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன 
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 

வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7 

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா 
ராமலகன ஸீதா மன பஸியா || 8

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திகாவா 
விகட ரூபதரி லம்க ஜராவா || 9 

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே 
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே 
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே || 11 

ரகுபதி கீன்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாஈ || 12 

ஸஹஸ வதன தும்ஹரோ ஜாஸ காவை 
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 

ஜம(யம) குபேர திகபால ஜஹாம் தே 
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா 
லம்கேஶ்வர பஏ ஸப ஜக ஜானா || 17 

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ 
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ 
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 

துர்கம காஜ ஜகத கே ஜேதே 
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 

ராம துஆரே தும ரகவாரே 
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா 
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை 
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 

பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||

னாஸை ரோக ஹரை ஸப பீரா 
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 

ஸம்கட தேம்(ஸேம்) ஹனுமான சுடாவை 
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 

ஸப பர ராம தபஸ்வீ ராஜா 
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 

ஔர மனோரத ஜோ கோஇ லாவை 
ஸோஈ அமித ஜீவன பல பாவை || 28 

சாரோ யுக பரிதாப தும்ஹாரா
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 

ஸாது ஸன்த கே தும ரகவாரே 
அஸுர னிகன்தன ராம துலாரே || 30 

அஷ்டஸித்தி னௌ(னவ) னிதி கே தாதா 
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா 
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 

தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜனம ஜனம கே துக பிஸராவை || 33 

அம்த கால ரகுவர புரஜாஈ 
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாஈ || 34 

ஔர தேவதா சித்த ன தரஈ 
ஹனுமத ஸேஇ ஸர்வ ஸுக கரஈ || 35 

ஸம்கட கடை மிடை ஸப பீரா 
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாஈ 
க்றுபா கரோ குருதேவ கீ னாஈ || 37 


ஜோ ஶத வார பாட கர கோஈ 
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோஈ || 38 

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா 
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா 
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 

தோஹா

பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் 
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் 
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாஈ ஸப ஸன்தனகீ ஜய

Monday, 23 January 2017

உள்ளத்தில் நல்ல உள்ளம் - பாடல்

உள்ளத்தில் நல்ல உள்ளம் - பாடல்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா......., வருவதை எதிர்கொள்ளடா, உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா........., வருவதை எதிர்கொள்ளடா, தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா நானும் உன் பழி கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா......, வருவதை எதிர்கொள்ளடா... மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா.. மன்னித்து அருள்வாயடா கர்ணா....., மன்னித்து அருள்வாயடா..... செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா........., வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

--------------------------------------------------

மாலைப் பொழுதின் மயக்கத்திலே - பாடல்


Maalai pozhuthin mayakkathile .........Very good Tamil sons


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி? காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி? இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி? காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி.


---------------------------------

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் .நினைத்து மகிழ வேண்டிய வரிகள்

வளர்ந்த கலை மறந்து விட்டாள் - பாடல்


வளர்ந்த கலை மறந்து விட்டாள்

ஆ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா பெ...குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா   ஆ ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா   காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா பெ.....காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா அந்த காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ஏனடாகண்ணா மனதில் அன்றே எழுதிவைத்தேன் தெரியுமாகண்ணா அதை மறுபடியும் எழுதச்சொன்னால் முடியுமாகண்ணா   ஆ ... தினம்தினம்   ஏன்கோபம்கொண்டாள் கூறடாகண்ணா அவள் தேவை என்ன ஆசையென்ன கேளடாகண்ணா பெ.....நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ண அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமாகண்ணா ஆ.....வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடாகண்ண்ணா  அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடாகண்ணா இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா பெ.....அவரில்லாமல் எனக்கு வேறு யாரடாகண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடாகண்ணா

நான் பேச நினைப்பதெல்லாம் - பாடல்

பாட பாட தித்திக்கும் பாடல்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும் ம்ஹ்ம் ம்ஹ்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ஹ்ம் ம்ஹ்ம்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும் ம்ஹ்ம்ம் ம் ம்ஹ்ம்ம்...
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்  நானாக வேண்டும் ம்ம் ம்ம் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்  உனக்காக வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்...
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்  பசியாற வேண்டும் 
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..
மடிமீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும் ம்ம்.. ம்ம்.. சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை  பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை விலை ஏதும் இல்லை ஒன்றோடு ஒன்றாக உயிர்
சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. உலகங்கள் நமையன்றி வேறேதுமில்லை  வேறேதும் இல்லை ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்  உறவாட வேண்டும் ம்ஹ்ம்.. ம்ஹ்ம்..
------------------------------------------------------------------------

நாலு கோடி பாடல்கள் - ஔவையார்

நாலு கோடி பாடல்கள் - ஔவையார் 


"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்" 


தமிழ் பாட்டி பாடிய பாடல் பிரம்மாதம் !

நல்வழி - ஔவையார்

வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 வெண்பாக்களையுடைய நூல்,

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.



நூல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்.

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்.

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்
ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

மகிழ்ச்சிக்கு வழி!

மகிழ்ச்சிக்கு வழி! 

இந்த உலகில் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விஷயம். 

அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

புற உலகில் நமது வாழ்க்கைப் பிறரைச் சார்ந்திருப்பது போலவே, அகவாழ்விலும் நமது வாழ்க்கை பிறரைச் சார்ந்தே இருக்கிறது. 

இதைப் புரிந்துகொள்ள உதவுவதுதான். இந்த காதை. 

முன்னொரு காலத்தில் ராஜ்யவர்த்னன் என்ற ஒர் அரசர் இருந்தார். அவர் ஏழாயிரம் ஆண்டுகள் தன்னுடைய நாட்டை மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். 

(ஏழாயிரம் ஆண்டுகள் எப்படி ஒருவர் உயிருடன் இருந்திருக்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம். இது புராணக்கதை. கதைகளில் சொல்லப்படும் பல நிகழ்ச்சிகள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாதுதான். ‘ஏழாயிரம் ஆண்டுகள்’ என்றால் நீண்ட காலம் என்று பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், புராணக் கதைகள் மூலம் சொல்லப்படும் கருத்தைத்தான் நாம் முக்கியமாகவும் சாரமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.) 

அரசாட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றதால் மக்களுக்கு அரசன்மீது மிகுந்த மரியாதை இருந்தது.

ஒரு நாள்— 

ராணி, அரசனுக்குத் தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தாள். 
திடீரென்று அரசியின் கண் கலங்கியது! 

இதைப் பார்த்த அரசர், அரசியிடம் அவள் கலங்குவதற்குரிய காரணத்தை விசாரித்தார். 

“உங்கள் தலையில் ஒரு முடி நரைத்திருக்கிறது! அப்படியென்றால் உங்களுக்கு வயதாகிவிட்டது என்றுதானே அர்த்தம்? அதனால்தான் நான் கண் கலங்கினேன்!” என்று அரசி வருத்தத்துடன் கூறினாள். 

“இதற்குப்போய் யாராவது அழுவார்களா? இது காலன் எனக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை! எனவே நான் உடனே காட்டிற்குச் சென்று எஞ்சியுள்ள காலத்தை தவத்தில் கழிக்க வேண்டும்” என்றார் அரசர். 

“அப்படியானால் நானும் உங்களுடன் வருவேன்” என்றாள் அரசி. 

அரசனும் அரசியும் காட்டிற்குப் போய்விட்டால் அரசாங்கம் என்ன ஆவது? 

பொதுமக்கள் பார்த்தார்கள். அவர்கள் அரசனிடம் சென்று, “நீங்கள் இருவருமே காட்டுக்கு போக வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள். நாங்கள் சிறிது காலம் கழித்து உங்களிடம் வந்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கூறுகிறோம்” என்று சொல்லிவிட்டு, வெகு தொலைவில் இருந்த சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார்கள். 

மூன்று மாதம் கழித்து. 

சூரிய பகவான் அவர்களுக்குக் காட்சியளித்து, “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். 

“எங்கள் அரசர் இன்னும் 10,000 ஆண்டுகள் எந்த நோய் நொடியும் இல்லாமல் இளமையோடு இருந்து எங்கள் நாட்டை நன்றாக ஆட்சி செய்ய வேண்டும்” என்று மக்கள் வரம் கேட்டார்கள். 

சூரிய மகவானும் அவர்கள் விரும்பிய படியே வரம் கொடுத்து மறைந்தார். 

அரசனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அவர் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக வருத்தப்பட்டார். 

இதைக் கண்ட அரசி, “ இந்தச் செய்தியினால் மகிழ்ச்சியடைவதற்குப் பதில் வருத்தப்படுகிறீர்களே, ஏன்?” என்று வினவினாள். 

“இந்த வரத்தினால் நான் எப்படி சந்தோஷப்பட முடியும்? நான் பத்தாயிரம் வருடங்கள் உயிரோடு இருக்கலாம். ஆனால் நீயும், இந்த வரத்தைப் பெற்றுத் தந்த நம்முடைய நாட்டு மக்களும் உயிரோடு இருக்க மாட்டீர்களே! என்னுடைய ராணியாகிய நீயும், என் அன்பிற்குரிய இந்த ஜனங்களும் இல்லாமல் நான் மட்டும் எப்படி பத்தாயிரம் ஆண்டுகள் சந்தோஷமாக இருக்க முடியும்?” என்றார் அரசர். 

பின்பு அரசனும் அரசியும், அதே சூரியனின் ஆலயத்திற்குச் சென்று தவம் புரிந்தார்கள். 

சூரிய பகவான் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து அவர்களுக்கு தரிசனம் தந்தார். 

அப்போது அரசனும் அரசியும், “நாட்டில் இப்போதிருக்கும் எல்லோருமே பத்தாயிரம் ஆண்டுகள் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்“ என்ற வரத்தை சூரிய பகவானிடம் வேண்டிப் பெற்றார்கள். 

இந்தக் கதை மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயர் சொல்வதாக அமைந்துள்ளது. 

கதையின் நீதி: நம்முடைய மகிழ்ச்சியில் மற்றவர்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது; மற்றவர்களின் மகிழ்ச்சியில் நம்முடைய மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. இதைத்தான் இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது. 

அளவே அழகு - சிறுவர் கதைகள்

அளவே அழகு - சிறுவர் கதைகள் 

ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன. 

பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர் நண்பர் ராமலிங்கம் ‘ என்ன பெரியநாயகம்! ஏன் கவலையாயிருக்கே என்ன சமாசரம் என வினவினார். பெரியநாயகம் வஷயத்தைக் கூறியதும் ‘இதுக்கா கவலைப் படறே. ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு அங்க தள்ளி விடு. போ, வேலையைப் பாரு என்றான் ராமலிங்கம். 

இவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும், உப்பும் இப்படி மறியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயணற்று போவோம்!. என்று வருந்தி தங்களை உற்பத்தி செய்யும் கரும்பினிடமும், கடலிடத்திலும் முறையிட்டன. 

கரும்பு சொன்னது சர்கரையைப் பார்த்து நீ என்ன உப்பா கரிச்சுக் கொட்ட கல்யாணம் மற்றும் எல்லவைபவங்களுக்கும் நீ இல்லாமலா, குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் கொடுப்பார்கள். தெய்வப் பிரசாதமாகிய சர்கரைப் பொங்களிலும் உன் அண்ணன் வெல்லம்தான். ஒரு நல்ல செய்தி சொன்னால் அவன் வாயில் சர்க்கரைப் போடுங்கள் என்பது சொல் வழக்கம். யானைக்கு பிடித்ததும் கரும்புதான், அம்பாள் கையில் வைத்திருப்பதும் கரும்புதான். கரும்பில்லாத பொங்கல் விழாவா என்று தைரியம் கூறியது. 

இதைக் கேட்ட கடல் ஆத்திரத்தில் பொங்கியது. டேய் உப்பு! என்ன யோசிக்கிரே. நீ இல்லாம ஒரு பண்டமுண்டா. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும், மசாலா, பொறியல் எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைப்பார்களா? ஊறுகாய்க்கும் உப்பு, உடல் அடக்கத்திற்கும் நீ தான், “உங்கள் உப்பைத் தின்னவன் உங்களுக்கு துரோகம் நினைப்பானா என்று தானே சொல்கிறார்கள்”. உப்பு சப்பில்லாத என்ன சாப்பாடு என்று சொல்லும் நம்ம ஆதரவாளராகிய சாப்பாட்டு ராமன்கள் இல்லையா? நீ பல பிராண்டுகளில் விற்பனைக்கு வந்து விட்டாய். நோய் குணமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டு உப்பு போடுகிறார்களே. தெரியாதா உனக்கென்ன குறைச்சல் என்றது கடல். 

ஒரு தினம் பெரிய நாயகம் தள்ளாடி வீட்டில் நுழைவதைப் பார்த்த அவன் மனைவி, ‘ஏங்க! என்ன ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டது.. 

என் காலில் ஒரு புண் வந்தது. அதுக்கு மருந்து போட்டும் இன்செக்ஷன் செய்தும் குணமாகலே. டாக்டர் சொல்றார். எனக்கு சக்கரை வியாதியாம். இனிப்பு சாப்பிட்டக் கூடாதாம். அப்போது தான் புன் குணமாகுமாம் என்று என்று புலம்பினான் பெறியநாயகம். 

அதனாலென்ன. இனிமே நீங்க சாப்பிடறதிலே சர்கரையை ஒதுக்கிடறேன் என்று சமாதானப்படுத்தினாள் அவன் மனைவி. 

இதைக் கேட்ட உப்பிற்கு ரொம்ப குஷி. சர்கரையைப் பார்த்து இளித்தது. 

அப்போது ராமலிங்கம் அங்கு வந்தார். அவரிடம் எல்லாவற்றையும் விலாவரியாக கூறினார் பெரிய நாயகம். 

அதைக் கேட்ட ராமலிங்கம் கண்ணீர் விட்டார். உன்கதை இப்படி. என் கதை தெரியுமா. நான் திடீரென்று மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிடம் எடுத்து சென்றார்கள். அவர் சோதித்துவிட்டு எனக்கு ரத்தக் கொதிப்பாம், கொழுப்பு சத்து அதிகரித்து விட்டதாம். உடன் சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டுமாம். அல்லது அறவே தவிர்க்க வேண்டுமாம் என வருந்தினார். 

இதை செவியுற்ற சர்க்கரை உப்பை ஏளனமாகப் பார்த்தது. 

இனிப்பு உப்பைக் கூப்பிட்டு ‘நம்மைப் பற்றி நமக்கே தலை கனமேறி விட்டது. அதனால்தான் நம்மைப் படைத்த கடவுள் நம் தலையில் குட்டிப்பாடம் கற்பித்தார் என்றது. 

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான். என்பதையும் மருந்து போல் சாப்பிட்டால் விருந்து சாப்பிடலாம். விருந்து போல் சாப்பிட்டால் மருந்து தான் கதி! 
இடுகையிட்டது

அடக்கம் - சி றுவர் கதைகள்

அடக்கம் -  சி றுவர் கதைகள்

அடர்ந்த காட்டுப்பகுதியில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள பொந்து ஒன்றில் வசித்த எலியைக் கண்டதும், இரண்டும் பேசிப் பழகின. சிறந்த நண்பர்கள் ஆனார்கள். 

இருந்தாலும் எலி தற்பெருமை அடித்துக் கொள்ளும். நான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை அமைத்துவிடுவேன். என்னை யாறாலும் ஒன்றும் செய்யமுடியாது. பாம்பைக்கூட விரட்டியடித்து விடுவேன்.’ என்று வீண் பெருமை பேசும். 

ஒருநாள் எலியும், குதிரையும் கொஞ்சம் தூரத்தில் சென்று மேய்ந்து வர முடிவு செய்தன. இரண்டும் பேசிக்கொண்டு நடந்தன. அப்போது, ‘நான்தான் உன்னை வழி நடத்தி செல்வேன். நான் சண்டையில் அவனை வீழ்த்தியிருக்கிறேன், இவனை வீழ்த்தியிருக்கிறேன்’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே முன் சென்றது எலி. திடீரென்று எலி நின்றது. 

‘ஏன் நின்றுவிட்டாய்? தொடர்ந்து செல்’ என்றது குதிரை. 

‘உனக்கு கண் சரியாக தெரியாதா? எதிரே பார் ஆறு ஓடுகிறது, எப்படி கடப்பது?’ என்று கேட்டது எலி. 

‘அது ஆறா? சிறிய கால்வாய் தானே இது. எளிதாக கடந்துவிடலாம்’ என்றது குதிரை. 

‘குதிரையே இது கால்வாயா? எனக்கு ஆறுபோல்தான் தெரிகிறது, இறங்கினால் நிச்சயம் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும், நாம் இரண்டு பேரும் மூழ்கிவிடுவோம்’ என்றது எலி. 

குதிரை எலியின் பேச்சை கண்டுகொள்ளாமல் கால்வாயில் இறங்கியது, ‘ஏய் எலியே, என் முழங்கால் அளவு கூட வெள்ளம் இல்லை. இதையை நீ ஆறு என்கிறாய், உடனே இறங்கிவா?’ என்றது குதிரை. 

‘நண்பா உணக்கு வேண்டுமானால், இது குறைந்த தண்ணீராக இருக்கலாம். ஆனால் என் உருவத்திற்கு இது நதிபோல வெள்ளப்பெருக்கு தான். தயவு செய்து என்னை உன் முதுகில் ஏற்றி அக்கரையில் விடு. நான் என்னைப் பற்றி கர்வத்துடன் பேசியதை மறந்துவிடு’ என்று மன்னிப்புக் கேட்டு அடங்கியது எலி. 

‘அப்படிவா, வழிக்கு. இனியும் வீண் பெருமை பேசி வாழாதே’ என்று எலியை, தன் மதுகில் ஏற்றி அக்கரையில் விட்டது குதிரை. இரண்டும் கர்வமின்றி நண்பர்களாக வாழ்ந்தன. 

உண்மையின் பலம் - சிறுவர் கதைகள் !

ரவி, மணி இருவரும் நண்பர்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இருவரும் படுசுட்டி பையன்கள். 

ரவியின் மாமா பட்டணத்தில் வேலை செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் ஊருக்கு வருவதாக சொல்லியிருந்தார். வரும்போது பரிசுகள் வாங்கி வருவதாக கூறினார். 

ரவிக்கு ஒரே சந்தோஷம். ‘எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும், மாமா என்ன பரிசு வாங்கி வருவார்’ என்பதே அவனது சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் ரவி, அம்மா நான் கிரிக்கெட் விளையாடச் செல்கிறேன். மாமா வருவதற்குள் வந்துவிடுவேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். மணியையும் அழைத்துக் கொண்டு அருகே உள்ள மைதானத்தில் விளையாடச் சென்றான். 

அவர்கள் விளையாடச் செல்லும் வழியில் மாமரத்தில் நிறைய பழங்கள் காய்த்து தொங்குவதைக் கண்டனர். 

‘கல்லால் அடித்து மாம்பழத்தை விழ வைத்து தின்போம்’ என்றான் ரவி. மணி அதை விரும்பவில்லை. ரவி கட்டாயப்படுத்தவே இருவரும் மாமரத்தில் கல்லெறிந்தனர். கிழே விழுந்த மாம்பழங்களை எடுத்து சுவைத்துக் கொண்டே விளையாடச் சென்றனர். 

மாம்பழங்கள் ருசியாக இருந்ததால் விளையாடிவிட்டு திரும்பும்போதும், இருவரும் மாமரத்தில் கல்லெறிந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மீது கல் பட்டுவிட்டது. உடனே ரவியும், மணியும் ஓட்டம் பிடித்தனர். 

‘யாரும் துரத்துகிறார்களா?’ என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினார்கள். வீடு வந்து சேர்ந்தபிறகுதான் இருவரும் நிம்மதி அடைந்தனர். 

வீட்டில் மாமா வந்திருந்தார். ரவிக்கு பயம் விலகி சந்தோஷம் தொற்றிக் கொண்டது. 

மாமாவிற்கு ரவியின் கால்சட்டை நிறத்தைப் பார்த்ததும், மரத்தில் கல்லெறிந்தது அவன்தான் என்பது தெரிந்தது போனது. 

அவர் ரவியிடம் இது பற்றி கேட்டார், ‘என்ன ரவி, கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்தாச்சா? உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். நீ இன்று ஏதாவது தவறு செய்தாயா?’ என்றார். 

ரவி ‘இல்லவே இல்லை’ என்று மறுத்தான். பொய்யாக சத்தியமும் செய்தான். 

உடனே அவனது மாமா, அருகில் நின்ற மணியை அழைத்தார். “நீங்கள் இன்று ஏதாவது தவறு செய்தீர்களா?’ என்றார். 

அவன் உண்மையை ஒத்துக் கொண்டான். ‘ஆமாம் அங்கிள், நாங்கள் மாமரத்தில் கல்லெறிந்து திருடி சாப்பிட்டோம். அப்போது யார் மீதோ கல் பட்டுவிட்டது. உடனே ஓடிவிட்டோம்’ என்றான் மணி. 

‘உங்களிடம் கல்லடி பட்டவனே நான்தான்’ என்ற ரவியின் மாமா, உண்மையைச் சொன்ன மணிக்கே, நான் வாங்கிவந்த பரிசு, என்று கூறி விலை உயர்ந்த கைகடிகாரத்தை மணியின் கையில் கட்டிவிட்டார். 

இருவரும், மாமாவிடம் மன்னிப்புக் கேட்டனர். ரவி, ‘இனிமேல் பொய் சொல்ல மாட்டேன்’ என்று உறுதி கூறினான். அவனுக்கு கிரிக்கெட் பந்து வாங்கிக் கொடுத்து, ஆறுதல் படுத்தினார் அவனது மாமா. 

கதையின் நீதி: உண்மையே பேச வேண்டும், அதுவே மதிப்பை உயர்த்தும். 

நல்லதை செய்வோம் ! சிறுவருக்கான கதைகள்

நல்லதை செய்வோம் !

நரிகள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பெயர் ஏற்பட்டிருந்தது. 

அதனால் அந்தக் காட்டுக்குள் நரிகளைக் கண்டாலே எல்லா விலங்குகளும் கடித்து விரட்டின. எனவே நரிகள் அந்தக் காட்டை காலி செய்து கொண்டு அடுத்த காட்டிற்குச் சென்றுவிட்டன. 

இரண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. மூன்றாவது தலைமுறையில் பரதன் என்ற இளம் நரி இருந்தது. அதற்கு தனது மூதாதையார் கதையைக் கேட்டதும் அவமானமாக இருந்தது. இந்த அவமானத்தை துடைத்து திரும்பவும் சொந்த காட்டில் வாழ வேண்டும். நம் இனத்தையும் சொந்த காட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என எண்ணியது. 

அதற்காக பழைய காட்டிற்குச் சென்று அனைத்து விலங்குகளையும் சந்தித்து பேசுவது என்று முடிவெடுத்த பரதன் பயணத்தை தொடங்கியது. 

பரதனைக் கண்ட மற்ற விலங்குகள், ‘புதிய வன் யாரோ வருகிறான்’ என்று கலங்கின. வயதான விலங்குகளோ நரியை அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் இங்கு எங்கே வந்தான்’ என்று முறைத்தன. ‘அவனிடம் யாரும் பேச வேண்டாம்’ என்று இளைய தலைமுறைக்கு உத்தரவிட்டன. 

“எங்கள் இனத்தை சகுனி குணம் படைத்தவர்கள், கூட இருந்தே குழி பறிப்பவர்கள். தந்திரசாலிகள் என்று யாரோ கட்டிவிட்ட கதையை நம்பலாமா? நாங்கள் மட்டும்தான் கெட்டவர்களா? மலர்களில் எல்லாமே மணமிக்கதா? மணமற்றவையும் கலந்துதான் உள்ளன. எங்களிலும் நல்லவர்களும் உண்டு” என்று வாதம் செய்து விலங்குகளிடம் நியாயம் கேட்டது. 

ஆனால் எல்லா விலங்குகளும் அதை ஏற்பதாக இல்லை. ‘நீ இங்கிருந்து ஓடிப் போய்விடு’ என்று விரட்டின. மனம் உடைந்த நரி, மலை மீதேறி கிழே விழுந்து உயிரை விட்டுவிட முடிவெடுத்தது. 

அப்போது அங்கிருந்த குயில், “நரி அண்ணே உங்கள் இனத்தின் அவப்பெயரை துடைக்க தானே புறப்பட்டு வந்தீர்? ஒரு லட்சியத்தை சுலபமாக அடைய முடியாது. விலங்குகள் போற்றும்படி செய்து அவைகளின் நம்பிக்கையைப் பெற்றால் உங்கள் குறிக்கோள் வெற்றி பெறும். மயற்சி செய்யுங்கள்” என்றது. 

நீ சொல்வதும் சரிதான் என்ற நரி தற்கொலை முடிவை கைவிட்டது. புத்திசாலித்தனமாக செயல்பட முடிவெடுத்தது. 

வேடர்கள் வலை விரித்திருந்ததைக் கூறி பறவைகளிடம் நன்மதிப்பைப் பெற்றது நரி. அதேபோல காலுடைந்த முயலை பத்திரமாக அதன் இருப்பிடத்திற்க்கு அழைத்து வந்து விட்டது. ஒரு மரத்தில் இருந்து தவறி விழுந்த குருவிக் குஞ்சை, அதன் கூட்டில் எடுத்து வைத்தது. இதைக் கண்ட தாய்ப்பறவை நரியை வாழ்த்தியது. 

இப்படியே சின்னச் சின்ன உதவிகளைச் செய்து நரி கொஞ்சம் கொஞ்சமாக நற்பேர் பெற்று வந்தது. 

ஒரு நாள் வேட்டைக்கார்கள், பெரிய பள்ளம் வெட்டி இலை தழைகளால் மூடி வைப்பதை நரி பார்த்தது. அந்தப் பக்கமாக வந்த யானைக் கூட்டத்தை எச்சரிக்கை செய்து அவற்றை காப்பாற்றியது. 

யானைக்கூட்டம் காட்டுக்கு ராஜாவான சிங்கத்திடம் நரி செய்த உதவியை சொல்லின. அதேபோல முயல், புறாக்கள், பறவைகளும் தங்களுக்கு நரி செய்த நன்மையைக் கூறின. இதனால் சிங்கராஜா, நரிகளை தங்கள் காட்டில் சேர்த்துக் கொள்வதாக முடிவெடுத்தது. மற்ற மிருகங்களும் அதை ஆமோதித்தன. 

பரதன் சந்தோஷமாக தங்கள் வசிப்பிடத்திற்குச் சென்றது. தங்கள் குழுவினருடன் தங்கள் சொந்த காட்டுக்கு திரும்பி வந்து வாழத் தொடங்கியது.